பெருமாள்குளம் ஸ்ரீஞானகரை சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா

0
25
sathankulam news

சாத்தான்குளம், ஜன. 30:

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீஞானகரைசுடலைமாடசுவாமி கோயில் கொடைவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி காலை 4மணிக்கு உவரி ஸ்ரீசுயம்புலிங்கசுவாமிகோயிலில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கணபத ஹோமம், அபிஷேகம், கணபதி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 12மணிக்கு உச்சிகால அலங்கார தீபாராதனை, நடைபெற்றது. தொடர்ந்தசு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6மணிக்கு பெங்கலிடுதல், 7மணிக்கு மகுடஇசை, இரவு 10மணிக்கு படப்புடன் கூடிய சாமக்கொடை, அலங்கார தீபாராதனை, நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி வேட்டைக்கு சென்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here