நாசரேத், ஜன.30:
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் பிரகாசபுரம் சேகரம் நெய்விளை சபை தூய இம்மானுவேல் ஆலய 92வது பிரதிஷ்டை விழா கடந்த 22ம் தேதி தொடங்கி 6நாட்கள் நடந்தது.
முதல் 3 நாட்கள் ஆலய வளாகத்தில் உயிர் மீட்சிக் கூட்டங்கள் நடந்தது. தேவகோட்டை பிரதிபலிக்கும் ஊழியங்களை சேர்ந்த லியோராகேஷ், பிரின்ஸி லியோஆகியோர் தேவசெய்தி கொடுத்தனர். 4வது நாள் விற்பனைவிழா நடந்தது.
மாலை ஆயத்த ஆராதனை, ஞானஸ்நானம் பொருட்கள் பிரதிஷ்டை நடந்தது. கோவை பரி பவுல் மகளிர் கல்லூரி தலைவர் டேவிட் தேவசெய்தி கொடுத்தார். 5வது நாள் அதிகாலை 3.30மணிக்கு அசன ஆயத்த ஆராதனை பரி.நற்கருணை ஆராதனை நடந்தது. ஸ்ரீவைகுண்டம் சேகர குரு வேதநாயகம் தேவசெய்தி கொடுத்தார். அன்றுமாலை 4மணிக்கு அசனநிகழ்ச்சி நடந்தது.சேகரகுருஜெபவீரன்ஜாண் ஜெபித்து அசனவிருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பேருக்குஅசன விருந்து வழங்கப்பட்டன.
6வது நாள் 75வது வாலிபர் பண்டிகை நடந்தது. காலை 8.30மணிக்கு வேதாகமத் தேர்வுகலை 10மணிக்கு பண்டிகை ஆராதனை நடந்தது. திருமண்டல வாலிபர் சங்க ஊழியர் இம்மானுவேல் தேவசெய்தி கொடுத்தார். அன்று மாலை 4மணிக்கு அசனத்தில் உபயோகிக்கப்பட்டபொருட்கள் ஏலமும்இமாலை 7மணிக்கு கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.
ஏற்பாடுகளை சேகர குரு ஜெபவீரன் ஜாண், சபை ஊழியர் சாலமோன் ராஜ் மற்றும் நெய்விளை சபையார் செய்திருந்தனர்.