குலையன்கரிசல் குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் – போலீஸ் விசாரணை

0
37
174

தூத்துக்குடி, பிப்.2:

தூத்துக்குடி அருகே குலையன்கரிசல் – கூட்டாம்புளி பகுதி குளம் தற்போது பெய்த மழையால் முழுமையாக நிரம்பியுள்ளது.

இந்நிலையில், இன்று அந்த குளத்தில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதை கண்டு அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் சம்ப இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை போலீசார் குளத்தில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளத்தில் பிணமாக கிடந்த அந்த நபருக்கு சுமார் 70வயது இருக்கலாம். அவர் யார் என்று தெரியவில்லை. சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார்.

இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தப்பகுதியில் யாராவது காணாமல் போய் உள்ளனரா? என்று விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here