ஏரல் சப் – இன்ஸ்பெக்டர் பாலு உருவப்படத்திற்கு தூத்துக்குடியில் அமமுகவினர் மலர்தூவி அஞ்சலி

0
58
ammk news

தூத்துக்குடி, பிப்.2:

ஏரல் சப் – இன்ஸ்பெக்டர் பாலு உருவப்படத்திற்கு தூத்துக்குடியில் அமமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஏரல் காவல் நிலையத்தில் சப் – இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்த பாலு நேற்று அதிகாலை சரக்கு வாகனத்தால் மோதி கொலை செய்யப்பட்டார். வீரமரணம் அடைந்த அவருக்கு தூத்துக்குடி 30வட்ட அமமுக சார்பில் வட்ட செயலாளர் நடிகர் காசிலிங்கம் தலைமையில் பொதுமக்கள் இன்று மாலை மவுன அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி டூவிபுரம் 2வது தெரு சந்திப்பில் நடைபெற்ற இந்த மவுனஅஞ்சலி நிகழ்ச்சியில் மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் கலந்துகொண்டு வீரமரணம் அடைந்த சப்&இன்ஸ்பெக்டர் பாலு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதில், ஜெ.பேரவை மாவட்ட தலைவர் சின்னச்சாமி, வட்ட பொருளாளர் சுப்பையா, வட்ட இணைச்செயலாளர்கள் மணி, சாரதி மற்றும் ரெங்கன், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை 30வது வார்டு வட்ட செயலாளர் நடிகர் காசிலிங்கம் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here