லே செயலாளருக்காக ஸ்டாலினிடம் சீட் கேட்ட பேராயர் – அதிர்ச்சியில் திமுகவினர், திருச்சபையினர் !

0
130
dmk news

தூத்துக்குடி,பிப்.5:

தூத்துக்குடிக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம், தேர்தலில் போட்டியிட லே செயலாளருக்காக சீட் கேட்ட சம்பவம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியையும், திருமண்டல மக்களிடம் சல சலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயணத்திற்காக இன்று (05.02.2021)தூத்துக்குடிக்கு வந்தார். அவரை தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமையில் திருமண்டல நிர்வாகிகள் சந்தித்தனர். சாயர்புரத்தில் ஜி.யு போப் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் அவர்கள் மனு கொடுத்தனர். அப்போது பேராயர் தேவசகாயம் திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசினார். ‘வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் திருமண்டல லே செயலாளர் எஸ்.டி.கே.ராஜனை தி.மு.க வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தாராம்.

யாரும் எதிர்பாராத நிலையில் பேராயர் வைத்த கோரிக்கையை கேட்டு அங்கு நின்ற திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் திமுக போட்டியிடுகிறதா? அல்லது கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறதா என்பது இதுவரை உறுதியாகவில்லை. இருகட்சி நிர்வாகிகளில் சிலர் தொகுதியை பெறுவதற்கு தங்கள் தலைமையிடம் முயற்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில் லே செயலாளருக்காக பேராயர் சீட் கேட்ட தகவல் திமுகவினரை மட்டுமல்லாது திருமண்டல நிர்வாகிகளையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் மோசஸ்கிருபைராஜ் நம்மிடம் கூறுகையில், ‘’அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய பேராயர், இப்படி லே செயலாளருக்காக திமுக தலைவரிடம் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டிருப்பது ஏற்கமுடியாத விசயமாகும். அவர் செய்திருக்கும் இச்செயல், அவர் வகித்து வரும் பதவிக்கு அழகல்ல.

திருமண்டலத்தில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கிறது. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு இதுவரை பணி ஒப்புதல் வழங்கி ஊதியம் வழங்காமல் உள்ளது. அவர்கள் பிரச்னை குறித்து தெரிவித்திருக்கலாம். சிறுபான்மை மக்களுக்கு தேவையான சில சலுகைகளை கேட்டிருக்கலாம். ஆனால் பொதுவாக இருக்க வேண்டிய பேராயர் லே செயலாளருக்காக சீட் கேட்டிருப்பது எங்களுக்கு மிகுந்த வருத்ததை ஏற்படித்தியிருக்கிறது.

அந்த லே செயலாளர் அதிமுக விசுவாசியாவார். அதுபோல் விவி என்கிற நபருக்கு ஆதரவாளராக செயல்படுபவர். லே செயலாளர் தலைமையில் நடத்தப்பட்ட திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சங்க கட்டணம் ரூ.600 என்று ஒட்டுமொத்தமாக உயர்த்திவிட்டார்கள். அந்த தீர்மானம் உறுப்பினர்களை சாப்பிட போகச் செய்துவிட்டு குறைந்த நபர்களை வைத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும். அது குறித்து நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது குறிப்பிட்ட அந்த லே செயலாளரை ஆதரித்து அவருக்காக பேராயர் கோரிக்கை வைப்பது ஏற்க முடியாத செயலாகும்.

திமுக ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை கருத்தில் கொண்டு, இவர்கள் திமுக விசுவாசிகள் என்று காண்பிப்பதற்காக செய்யும் திட்டமிட்ட செயலே இதுவாகும். மற்றபடி திமுகவிலோ அல்லது காங்கிரஸிலோ நேரடியாக அரசியலில் ஈடுபட்டு வருபவர்கள் ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற தொகுதியை பெற முயற்சி செய்து வரும் நிலையில், அவர்களை தவிர்த்துவிட்டு வேறு நபரை அடையாளம் காட்டுவது பேராயருக்கு அழகில்லை’’ என்றார் கோபமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here