கிறிஸ்தவ மதபோதகர் சகோ ஏ.அப்பாத்துரை உடல் நலக் குறைவால் மரணம்!

0
42
nalumavadi

நாசரேத்,பிப்.07:

கிறிஸ்தவ மத போதகர் சகோ ஏ.அப்பாத்துரை உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என மோகன் சி.லாசரஸ் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், நாலுமா வடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் உடன் ஊழியக்காரருமான சகோ அப்பாத்துரை கார்டியா அரெஸ்ட்டால் மரணம் அடைந்தார். அன்னாரது இழப்பு கிறிஸ்தவ மக்களுக்கு ஒரு பேரிழப்பு ஆகும்.

இதுகுறித்து நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவ னர் மோகன் சி.லாசரஸ் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட் டுள்ளதாவது:- எனக்கு பிரியமான வர்களே ஒரு துக்கமான செய்தி யை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.இயேசு விடுவிக்கி றார்ஊழியத்தில் என் உடன் ஊழியக்காரராக, என் உடன் சகோதர ராக, என்னோடு கூட இந்த ஊழி யத்திலே 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்த அன்பு சகோ தரர் அப்பாத்துரை அவர்களை தேவன் தன் இளைப்பாறுதலுக்குள் எடுத்துக் கொண்டார்.

அவர் நல்ல சுகம் பெற்று நூல் கள் மகிழ்ந்திருந்த சமயத்தில் திடீரென்று கார்டியா அரெஸ்ட் ஏற்பட்டதினால் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசித்து விட்டார்கள் என்ற செய்தி என்னை துக்கப்ப டுத்தியது. எனக்கு துணையாக தோள் கொடுத்து நின்ற சகோதரரை இழந்து நிற்கிறேன். என்னோடு இணைந்து எழுப்புதல் திட்டத்தை கொண்டு வந்த சகோதரர் எழுப் புதலுக்கு முன்னர் இறைவன் எடுத்துக்கொண்டார்.

அவரை இழந்து வாடும் அவரது மனைவி, மகள் மற்றும் குடும்பத்தார்களு க்கு எப்படி ஆறுதல் சொல்வது, எப்படி ஆறுதல் அடைவார்கள். எனக்காகவும், சகோதரர் குடும்பத் திற்காகவும் ஜெபம்செய்து கொள்ளுங்கள்.

சகோதரர் அப்பாத்துரை அவர்களது உடல் அடக்க ஆராதனை பாளையங்கோட்டை சாந்திநகர் சி.எஸ்.ஐ.ஆலயத்தில் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. சகோதரரின் மனைவி, மகள் மற்றும் குடும்பத்திற்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here