செல்வம் கொழிக்கவேண்டி.. அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 11ம் தேதி மிளகாய் வற்றல் மஹா யாகம்..

0
29
korampallam sithar news

தூத்துக்குடி,பிப்.7:

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் பக்தர்களின் வாழ்வில் பணம் கொழித்து செல்வவளம் பெருகிட வேண்டி வரும் 11ம் தேதி(வியாழக்கிழமை) தை ஸர்வ மஹாளய அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான கிலோ மிளகாய் வற்றல் மஹா யாகம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஒரே கல்லால் உருவான மிகப்பிரமாண்டமான ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி -மஹாகாலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது.

ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 11ம் தேதி(வியாழக்கிழமை) தை மாத ஸர்வ மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மிளகாய் வற்றல் கொண்டு மாபெரும் மஹா யாகம் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெறுகிறது.

பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன்தொல்லைகள், எதிரித்தொல்லைகள் யாவும் நீங்கிடவும், பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், கல்விவளம் சிறந்திடவும், திருமணவரன், குழந்தைபாக்யம் கிடைத்திடவும், வாழ்வில் நினைத்தது யாவும் நினைத்தபடி இனிதே நடந்தேறிடவும் வேண்டி ”சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர்” தலைமையில் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நடைபெறுகிறது.

வரும் 11ம் தேதி(வியாழக்கிழமை) காலை 8மணிக்கு சிறப்பு மஹா யாகத்திற்கான வழிபாடுகள் ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ”சாக்தஸ்ரீ சற்குருசீனிவாச சித்தர்” தலைமையில் கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. தொடர்ந்து காலை 10.30மணிக்கு ஆயிரக்கணக்கான கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மஹா யாகம் துவங்கி நடைபெறுகிறது.

அதனைத்தொடர்ந்து மதியம் 12மணிக்கு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிக்கும், மஹா காலபைரவருக்கும், குருமகாலிங்கேஸ்வரருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16வகையான அபிஷேகமும், மதியம் 1மணிக்கு மஹா தீபாரதனையும் நடக்கிறது. மஹா யாக வழிபாடுகளை முன்னிட்டு அன்று காலை 8மணி முதல் மாலை 6மணி வரை தொடர்ந்து இடைவிடாமல் ”கைமேல் பலன் தரும் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி மஹா யந்திர பாராயணம்” நடைபெறுகிறது.

பணம் கொழித்து, செல்வவளத்தை அள்ளித் தந்திடுவதுமான மிளகாய் வற்றல் மஹா யாகத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தங்களது பெயர்களை 94434 04832, 63698 74760, 95244 26161-என்ற எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்தும் பயன்பெறலாம். முன்பதிவு செய்து பங்கேற்றிடும் பக்தர்களுக்கு கடன்தொல்லைகள் யாவும் நீங்கி, இல்லத்தில் செல்வங்கள் பெருகும் ”மஹா யந்திரம்” வழங்கப்படுகிறது.

பக்தர்கள் அனைவரும் சிறப்பு மஹா யாக வழிபாட்டில் பங்கேற்று சிறப்பிக்குமாறு ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் கேட்டுக்கொண்டுள்ளார். சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக்குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here