மாறுதலாகி சென்ற தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனருக்கு சண்முகநாதன் எம்.எல்.ஏ வாழ்த்து

0
187
admk news

தூத்துக்குடி,பிப்.8:

மாறுதலாகி சென்ற தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனருக்கு சண்முகநாதன் எம்.எல்.ஏ வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஜெயசீலன் பணியிட மாறுதலாகி கணக்கெடுப்பு மற்றும் நிலப்பதிவு கூடுதல் இயக்குனராக சென்னைக்கு செல்வதை அடுத்து மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. அதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதில் வேளாண் விற்பனை குழு உறுப்பினர் திருப்பாற்கடல், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, முன்னாள் மீன் வளர்ச்சி கழக வாரிய தலைவர் அமிர்தகணேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் முனியசாமி, துணைச் செயலாளர் சரவணபெருமாள், இளைஞர், இளம்பெண்கள் பாசறை பகுதி செயலாளர்கள் சாம்ராஜ், நிலாசந்திரன் மற்றும் பாலஜெயம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சகாயராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here