தூத்துக்குடியில் கபடிபோட்டி – அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ பரிசு

0
159
anitharadahakrishanan

தூத்துக்குடி, பிப்.8:

தூத்துக்குடியில் நடந்த கபடிபோட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ பரிசு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகம் சார்பில் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி தருவை விளையாட்டு மைதானத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபராஜன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மணத்தி கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட அமெச்சூர் கபடிகழக தலைவர் அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார்.

இதில் திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாநில மீனவரணி துணை அமைப்பாளர் துறைமுகம் புளோரன்ஸ், கபடி கழக இணைச்செயலாளர் அந்தோணி, உதவி தலைவர்கள் அய்யாத்துரைபாண்டியன், டி.டி.சி.ராஜேந்திரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ஜெயக்கொடி, சுப்பிரமணியன், சுற்று சூழல் அணி ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய கபடி கழக பொறுப்பாளர்கள் பவுல்ராஜ், சங்கரேஷ்வரன், லெட்சுமணன், செல்வமுருகன், வேல், திருமாறன், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here