சாயர்புரம் – சுப்பிரமணியபுரம் இடையிலான சாலையில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

0
30
dasmac

தூத்துக்குடி, பிப்.8:

சாயர்புரம் – சுப்பிரமணியபுரம் இடையிலான சாலையில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து சாயர்புரம், நடுவைகுறிச்சியை சேர்ந்த ஜோயல் தலைமையில் அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

தூத்துக்குடி தாலுகா, சுப்பிரமணியபுரம் – சாயர்புரம் இடையிலான பிரதான சாலையில் சாயர்புரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்திற்கு எதிரே டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்காக அவசர அவசரமாக கடை கட்டப்பட்டுள்ளது.

இதன் அருகிலேயே சுமார் 50 அடி தூரத்தில் தூய ரபாயேல் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி, தூயரபாயேல் மருத்துவமனை, ஜி.யு.போப் கல்வியியல் கல்லூரி, கிறிஸ்தவ ஆலயம், சாயர் நினைவு ஆதரவற்ற முதியோர் இல்லம், தூய மேரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தூய மார்ட்டீன் தொடக்கப்பள்ளி ஆகியவை அமைந்துள்ளது.

டாஸ்மாக் கடை அமைப்பதற்கு கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு அடுத்த பிளாட்டில் சுமார் 10 அடி தூரத்தில் பள்ளி மாணவ-மாணவியர்கள் விளையாடும் போப் கல்லூரி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

எனவே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு கருதி சாயர்புரம் – சுப்பிரமணியபுரம் இடையிலான சாலையில் டாஸ்மாக் கடை அமைக்க அனுமதிக்க கூடாது என கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here