ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 1050ஏக்கர் சொத்து முடக்கம்

0
152
sasikala news

தூத்துக்குடி,பிப்.9:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 1050ஏக்கர் சொத்து முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகி நேற்று சென்னை வந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் இதுபோன்ற சொத்துக்கள் முடக்கப்பட்டு அரசுடமையாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட கால்வாய், சேரகுளம், வல்லகுளம் பகுதிகளில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 800 ஏக்கர் நிலமானது ரிவர்வே அக்ரோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் உள்ளது. இதுபோன்று, இதே பெயரில் சாத்தான்குளம் தாலுகாவில் மீரான்குளம் பகுதியில் சுமார் 250 ஏக்கர் இடம் உள்ளது.

மேற்கண்ட இடங்களை தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மேற்கண்ட சொத்துக்களை தமிழ்நாடு அரசின் சொத்து என பெயர் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட சொத்துக்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் சொத்துக்கள் என தெரிவிக்கப்படுகிறது. எனவே மேற்படி சொத்துக்களிலிருந்து பெறப்படும் வருவாயான வாடகை, நிலுவை வாடகை உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு பாத்தியப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here