மினி கிளினிக்குகளில் கிராம சுகாதார செவிலியர்களை நியமிக்க கோரிக்கை

0
65
nurse news

தூத்துக்குடி, பிப்.9:

மினி கிளினிக்குகளில் கிராம சுகாதார செவிலியர்களை நியமிக்க கேட்டு தூத்துக்குடியில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மினி கிளினிக்குகளில் கிராம சுகாதார செவிலியர்களை பணியில் அமர்த்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செவிலியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாப்பிள்ளையூரணியிலுள்ள தூத்துக்குடி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொன் சாந்தகுமாரி தலைமை வகித்தார்.

இதில், மாவட்ட அமைப்பு செயலாளர் மகாலெட்சுமி, மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, மாவட்ட இணைச்செயலாளர் நிர்மலாமேரி, மாவட்ட துணைத்தலைவர் வெரோனிகா, மாவட்ட பிரச்சாரக்குழு செயலாளர் தங்கம், கூட்டமைப்பு தலைவர் ராஜலட்சுமி மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஒருங்கிணைப்பாளர் சந்திரா நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here