மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த கோரிக்கை

0
47
news

தூத்துக்குடி, பிப்.9:

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த கேட்டு தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முனீஸ்வரன், அந்தோணிசாமி, ஆறுமுகம், வடிவேலு, ஆலோசனைமரியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தினர்.

இதில், நிர்வாகிகள் இம்மானுவேல், மெய்யழகன், முருகன், காசி, வயனபெருமாள் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here