தூத்துக்குடி,பிப்.11:
தூத்துக்குடி கடற்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் முன்னேற்றம் தரும் என்று இந்து வழிபாட்டுல் நம்பப்படுகிறது. அந்த வகையில் தை அமாவாசை தினமான இன்று காலையில் தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் ஏராளமானோர் கடலில் புனித நீராடினர். அங்கு தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பூஜைகள் நடத்தி வழிபட்டனர். இதே போன்று மாவட்டத்திலுள்ள கடலோரங்களிலும், ஆற்றங்கரையிலும் பல்வேறு இடங்களில் தர்ப்பணம் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஆயிரக்கணகக்கான மக்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று வழிபாடு செய்தனர்.