ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இளம்பெண் பலி

0
22
crime

ஸ்ரீவைகுண்டம்,பிப்.11:

ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் தங்க நயினார். இவரது மனைவி மீனாட்சி (25), இந்த தம்பதியருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீனாட்சி நேற்று தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேஷன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here