வல்லநாடு அருகே 8 மாத குழந்தையுடன் தாய் மாயம் – போலீஸ் விசாரணை

0
139
missing news

வல்லநாடு,பிப்.11:

வல்லநாடு அருகே 8 மாத குழந்தையுடன் தாய் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, கணபதி கோனார் தெருவைச் சேர்ந்தவர் தடிவீரன். இவரது மனைவி சுபாராணி (21). இந்த தம்பதியருக்கு, திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. 8 மாத பெண் குழநதை உள்ளது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி சுபா ராணி குழந்தையுடன் வீட்டை விட்டு சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலையத்தில் தடிவீரன் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here