சாயர்புரம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

0
136
snaching

சாயர்புரம்,பிப்.11:

சாயர்புரம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகேயுள்ள பண்டார விளை கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சன். இவரது மனைவி மெர்குலின் ஜெயசித்ரா (35), நேற்று மாலை சாயர்புரத்தில் இருந்து பண்டாரவிளைக்கு தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

கொம்புகாரன் பொட்டல் பஸ்ஸ்டாப் அருகே சென்றபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலையத்தில புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here