நாசரேத்,டிச.30: நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம் மோகன் சி.லாசரஸ் தலைமையில் ஜனவரி மாதம் 01-ஆம் தேதி நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகிலுள்ள நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம் .மோகன் சி.லாசரஸ் தலைமையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 01-ஆம்தேதி மதியம் 1 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது.
அதேபோன்று 2020 ஜனவரி மாதம் 01-ஆம் தேதி வருகிற புதன்கிழமை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம் நடைபெறுகிறது.இயேசு விடுவிக்கிறார் ஊழியக்குழுவினர் சிறப்புபாடல்கள் பாடுகின் றனர். புத்தாண்டு வாக்குத்தத்த செய்தியை மோகன் சி. லாசரஸ் வழங்கி சிறப்பு பிரார்த்தனையை ஏறெடுக்கிறார்.
புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் மக்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய மக்கள் தொடர்பு அலுவலர் து.சாந்தகுமார் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு ஆவண செய்யப்பட்டுள்ளன.கூட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை குரும்பூர் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் செய்து வரு கின்றனர்.