தூத்துக்குடியில் கருப்பு வைரம் என ஆசை காட்டி வியாபாரிகளிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

0
99
thoothukudi s.p

தூத்துக்குடி,பிப்.11:

பெங்களூர் ஜே.பி நகர் கொத்தனூர் தின்னே பகுதியை சேர்ந்தவர் சீதாராமன் மகன் அனந்தா (37), ஓசூர் பெஸ்தி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் தனுராம் மகன் வெங்கடேஷ் பாபு (45) ஆகியோர் கடந்த சில நாட்களாக தங்களிடம் கருப்பு வைரம் இருப்பதாகவும், அவசரத் தேவைக்கு வாங்கி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் அதற்காக ரூபாய் 27,00,000/- (இருபத்து ஏழு லட்சம்) வரை பணம் வேண்டும் என்றும் தூத்துக்குடியில் உள்ள சில நகை வியாபாரிகள் மற்றும் தனி நபர்களிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இது சம்மந்தமாக தூத்துக்குடி, தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், உதவி ஆய்வாளர் ரவிக்குமார், முதல் நிலைக் காவலர்கள் மாணிக்கராஜ், மகாலிங்கம், காவலர்கள் செந்தில், ஸ்ரீதர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு அனந்தா மற்றும் வெங்கடேஷ் பாபு ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த 425 கேரட் எடையுள்ள கருப்பு வைரம் எனப்படுவதையும் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தென்பாகம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்தார். பின் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி குறித்தும், கைப்பற்றப்பட்ட கருப்பு வைரத்தின் தன்மையை ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்யுமாறு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

இது குறித்து தகவலறிந்து மோசடி வேலையில் ஈடுபடவிருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்த தென்பாகம் காவல் ஆய்வாளர் தலைமையிலான தென்பாகம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here