தூத்துக்குடி, பிப்.11:
விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வரும் முன்னாள் தலைவர் மீது அனைத்து மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களிலும் புகார் மனு கொடுத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி குறிஞ்சி நகரிலுள்ள மாவட்ட அலுவலகத்தில் இன்று தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஜே.பில்லாஜெகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் நெல்லை சஜி, கன்னியாகுமரி மேற்கு சபின், தென்காசி சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாநில தலைவர் ஜெயசீலன், விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளராக பொறுப்பில் இருந்துவரும், முன்னாள் எம்.எல்.ஏ., புஸ்சி ஆனந்த் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கூறி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பது.
தொடர்ந்து பொய் குற்றச்சாட்டு கூறி வரும் ஜெயசீலன் மீது காவல்துறை மூலமாக சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட எஸ்.பி.அலுவலகங்களிலும் அந்தந்த மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புகார் கொடுப்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், மாவட்ட இளைஞரணி தலைவர்கள் நெல்லை ராஜகோபால், கன்னியாகுமரி மேற்கு பிரதீஷ், கன்னியாகுமரி கிழக்கு பிரேம்குமார், மாவட்ட மாணவரணி தலைவர்கள் நெல்லை ஜெயராம், கன்னியாகுமரி மேற்கு சதீஷ், தென்காசி மாரியப்பன், நெல்லை மாவட்ட ஆலோசகர் பைசல், கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளர் சிவா, தென்காசி மாவட்ட தொண்டரணி நியாஸ், விவசாய அணி தென்காசி சங்கர், கன்னியாகுமரி கிழக்கு சாலமோன், நாகர்கோவில் தொகுதி பொறுப்பாளர் ராஜேஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, கிளைக்கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.