செல்வம் கொழிக்கவேண்டி அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் பீடத்தில் மிளகாய் வற்றல் மஹா யாகம்

0
187
samy korampallam

தூத்துக்குடி,பிப்.11:

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் செல்வம் கொழிக்க வேண்டி தை ஸர்வ மஹாளய அமாவாசையான இன்று ஆயிரக்கணக்கான கிலோ மிளகாய் வற்றல் மஹா யாகம் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஒரே கல்லால் உருவான மிகப்பிரமாண்டமான ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி -மஹாகாலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது.

ஸ்ரீசித்தர் பீடத்தில் தை மாத ஸர்வ மஹாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் வாழ்வில் கடன் தொல்லை நீங்கிடவும், பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், திருமணவரம், குழந்தைபாக்யம் கிடைத்திடவும், வாழ்வில் நினைத்தது யாவும் நினைத்தபடி நடந்தேறிடவும் வேண்டி ”சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர்” தலைமையில் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது.

காலை 8மணிக்கு சிறப்பு மஹா யாகத்திற்கான வழிபாடுகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மஹா யாகமும், மதியம் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிக்கும், மஹா காலபைரவருக்கும், குருமகாலிங்கேஸ்வரருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 32வகையான அபிஷேகமும், தொடர்ந்து மஹா தீபாரதனையும் நடைபெற்றது.

சிறப்பு மஹா யாக வழிபாட்டில் திரளான பக்தர்கள் அரசின் அறிவுறுத்தல்படி முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வழிபட்டனர். சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக்குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here