தூத்துக்குடியில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள லாரி டிரைவருக்கு ஜெகன் பெரியசாமி உதவி

0
72
n.p.jegan

தூத்துக்குடி,பிப்.14:

தூத்துக்குடியில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள லாரி டிரைவருக்கு லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் ஜெகன் பெரியசாமி உதவி வழங்கினார்.

தூத்துக்குடியில் உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் உள்ள லாரி டிரைவர் மாரியப்பனுக்கு டிரைவர்கள் சங்கம், லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் பிக்சட் டெபாசிட் தொகையாக ரூ.50,000 மற்றும் செலவிற்கு ரூ.10,000, பலசரக்கு சாமான்கள் உள்ளிட்டவற்றை தூத்துக்குடி லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

இதில் லாரி உரிமையாளர் சங்க செயலாளர் விவேகானந்தன், துணைத்தலைவர் அமுல்ராஜ், துணைச் செயலாளர் முருகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பிரபாகர், அந்தோணி, பரத், லாரி புக்கிங் ஏஜெண்ட் அசோசியேசன் தலைவர் சுப்புராஜ், திமுக தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராமர், லாரி டிரைவர் சங்க நிர்வாகி ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here