தூத்துக்குடி,பிப்.13:
ஏழு பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திரகுல வேளாளர் சமுதாய சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய ஏழு உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திர குலவேளாளர் என்று அழைத்திடும் சட்டத்திருத்தம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்தம் நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின்னர் தேவேந்திர குலவேளாளர் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.