சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் : பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

0
30
modi news

சென்னை,பிப்.14:

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து தற்போது பேசி வருகிறார் பிரதமர் மோடி.

ஐ.ஐ.டி மெட்ராஸின் டிஸ்கவரி வளாகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் முதல் கட்டத்தில் 1,000 கோடி ரூபாய் செலவில் சென்னை அருகே உள்ள தாயூரில் இந்த வளாகம் கட்டப்படும்.

சென்னை கடற்கரைக்கும் அட்டிப்பட்டுக்கும் இடையிலான நான்காவது ரயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ . 293.40 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த 22.1 கி.மீ பிரிவு சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக பயணிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here