தூத்துக்குடியில் 17ம் தேதி முதல்வர் பேசும் பகுதிகளை அமைச்சர், அதிகாரிகள், ஆய்வு செய்தனர்

0
127
cm news

தூத்துக்குடி, பிப். 15:

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (புதன் கிழமை) பிராசரம் மேற்கொள்ள உள்ள 4 இடங்களில் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ, சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளை மறுநாள்(புதன்கிழமை) வருகிறார். மாவட்டத்தில் 4 இடங்களில் அவர் பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நாளை மறுநாள் காலை 9 மணியளவில் விமானம் மூலம் புறப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 10.15 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். தொடர்ந்து, முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்திலும், 12 மணிக்கு திருச்செந்தூரில் மகளிர் குழு கூட்டத்திலும், நண்பகல் 1 மணிக்கு ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாப்பிள்ளையூரணியில் நடைபெறும் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.

தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் மதிய உணவு இடைவேளையின்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நான்கு இடங்களிலும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மற்றும் வடக்கு மாவட்டச் செயலரான கடம்பூர் செ. ராஜூ, தெற்கு மாவட்டச் செயலரான எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், சின்னப்பன் எம்எல்ஏ, முன்னாள் எம்.எல்.ஏ மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் செல்வக்குமார்,

மாவட்ட அதிமுக அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், மாவட்ட இணைச்செயலாளர் செரினா பாக்கியராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரபாகு, தகவல் தொழிற்நுட்ப அணி செயலாளர் அருண் ஜெபக்குமார், ஒன்றிய செயலாளர் ஜவஹர், மாவட்ட அணி செயலாளர் ஏசாதுரை, தனராஜ், டேக்ராஜா, விக்ணேஷ், மத்திய பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தரும் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமிக்கு எழுச்சி மிகு வரவேற்பு அளிப்பது, பிரச்சார கூட்டங்களில் அதிக அளவில் தொண்டர்கள் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here