பெற்றோரை இழந்த 4 குழந்தைகள் உதவி கேட்டு மனு – பரிவோடு பதிலளித்தார் கலெக்டர் செந்தில்ராஜ்

0
153
thoothukudi collector news

தூத்துக்குடி,பிப்.15:

பெற்றோரை இழந்த 4 குழந்தைகள் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர்.

திருச்செந்தூர், பாரதியார் தெருவை சேர்ந்த மாரிச்சாமி.இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனையடுத்து அவரது மனைவி சரஸானந்த லெட்சுமி தனது குழந்தைகள் ஆனந்த மணிகண்ட ஜோதிலெட்சுமி, ஆனந்தசபரிமஞ்சரி, மஞ்சு, பிரியதர்சனி என்ற ருக்மணி ஆகியோருடன் வசித்து வந்தார். அவருக்கு விதவை அடிப்படையில் அங்கன்வாடி உதவியாளராக பணி வழங்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு அரசு சார்பில் திருச்செந்தூர் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. பின்னர் பட்டாவை அதிகாரிகள் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு சரஸானந்தலெட்சுமியும் இறந்துள்ளார். இதனால் பெற்றொரை இழந்த இவர்களது குழந்தைகள் ஆனந்த மணிகண்ட ஜோதிலெட்சுமி, ஆனந்தசபரிமஞ்சரி, மஞ்சு, பிரியதர்சனி என்ற ருக்மணி ஆகியோர் தனது தாத்தா சக்தி வேல் பராமரிப்பிலும் தனியார் காப்பகத்திலும் தங்கியிருந்து ஆறுமுகனேரி அரசு பள்ளியில் முறையே 12, 10,8,6 ஆகிய வகுப்புகள் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இவர்கள் நேற்று கலெக்டர் செந்தில்ராஜை சந்தித்து பெற்றோரை இழந்து அனாதையாக இருக்கும் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், படிப்பிற்கு உதவி செய்ய வேண்டும் என மனு அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு, அந்த குழந்தைகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்து கொடுத்து அனுப்பி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here