அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினமா – புதுச்சேரி நாராயணசாமி அமைச்சரவை கூண்டோடு ராஜினமா செய்ய முடிவு

0
34
narayanasamy

எந்த நேரத்தில்தான் ஆட்சிக்கட்டில் உட்கார்ந்தாரோ தெரியவில்லை நாராயணசாமி, அந்த நேரம் முதலே பிரச்னைதான். புதுச்சேரியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக நாராயணசாமி இருக்கிறார். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கவர்னராக வந்த கிரன்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே பிரச்னை இல்லாத நாட்களே இல்லை. எங்கள் நிம்மதியை கெடுக்கிறார். எங்களை செயல்படவில்லை என கவர்னருக்கு எதிராக புகார் கூறி வரும் முதல்வர், இது குறித்து ஜனாதிபதியிடமே முறையிட்டிருக்கிறார்.

இது அதிமுக – பாஜக வால் தனது ஆட்சிக்கு கொடுக்கும் இடைஞ்சல் என வாய்விட்டு பேசிவந்த நிலையில், திமுக தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி என்று திமுக ஒரு குண்டை தூக்கிபோட்டது. அப்படி இப்படியென அவர்களை சமாதானப்படுத்தி பிரச்னையை முடிவுக்கு கொண்டுவந்தார் நாராயணசாமி. இந்தநிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒவ்வொன்றாக ராஜினமா செய்து வருகிறார்கள். இன்று ஜான் குமார் என்கிற எம்.எல்.ஏவும் ராஜினமா செய்துவிட்டார். இன்றோடு 4 பேர் ராஜினமா செய்திருக்கிறார்கள்.

இந்தநிலையில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் சம எண்ணிக்கை எம்.எல்.ஏக்களை கொண்டதாக ஆகியிருக்கிறது. அதாவது தலா 14 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் சட்ட மன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே அமைச்சர் கந்தசாமி, நாராயணசாமி அமைச்சரவை கூண்டோடு ராஜினமா செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். மேலும் அவர் பாஜக, காங்கிரஸ் எம்.ல்.ஏக்களை மிரட்டி பணிய வைப்பதாக அவர் குற்றம் சாட்டிவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here