மாறுபடும் சூரனை வதம் செய்த ஊரில் தேர்தல் வேலை ரொம்பவே சூடுபிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார வேலையை தொடங்கி வேகமாக நடத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், வேட்பாளர் வாய்ப்பு அருகில் இருக்கும் ஒருவர், வாக்காளர்களை கவர பரிசு பொருளை வாரி வழங்கி வருகிறாராம். வீடுவீடாக குக்கர் கொடுத்து வருகிறார் என்கிறார்கள். அதை வாங்கியவர்கள் மூலம் தகவல் கசியத் தொடங்கியிருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்தபிறகு பரிசுபொருட்களை கொடுப்பது மிக கடினம் என்பதால் இப்போதே குக்கர் கொடுக்கும் வேலையில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறாராம் அவர்.
வீடுவீடாக குக்கர் கொடுப்பதால், அதுதான் நமது சின்னமோ என்று மக்கள் அதற்கு ஓட்டுபோட்டுவிட கூடாதே என்று இப்போது அச்சம் வந்திருக்கிறதாம் அந்த விநியோகிப்பாளருக்கு.