தூத்துக்குடி, பிப்.17:
ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையிலான இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதை திட்ட துவக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்டார்.
ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே ரூ.700 கோடி மதிப்பில் இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ, கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக ஸ்பிக் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் கார்பரேசன் செயல் இயக்குநர் நானேவாரே, பொதுமேலாளர் பாலகிருஷ்ணன், மனிதவள பொதுமேலாளர் வெங்கட்ராமன், பொறியியல் பிரிவு கௌதமன், மூத்த ஆலோசகர் தங்கராஜ், ஸ்பிக் நிரந்தர இயக்குநர் ராமகிருஷ்ணன், உதவி தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.