தூத்துக்குடி மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

0
146
tuty news

தூத்துக்குடி, பிப்.17:-

தூத்துக்குடி மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் முன்னேற்ற சங்க ஆண்டுவிழா தூத்துக்குடியில் நடைபெற்றது. விழாவிற்கு, மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மனோகரன், பொருளாளர் பெருமாள், துணைச்செயலாளர் நல்லதம்பி, ஆலோசகர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், சட்ட ஆலோசகர் அன்பரசன், தொழில்அதிபர் சுரேஷ், தென்மாநில இயக்க பொதுச்செயலாளர் சங்கைமணி, தூத்துக்குடி முதல்கேட் காந்தி சிலை ஐக்கிய வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் கனகவேல், மாவட்ட திமுக பிரதிநிதி சுரேஷ், 43வது வட்ட திமுக அவைத்தலைவர் ரவீந்திரன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.

விழாவில், சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் குமாரவேல், சித்திரவேல், ராஜ்பால், சேர்மத்துரை, நித்தியானந்தம், மாரியப்பன், கணேசன், ரமேஷ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here