தூத்துக்குடி, பிப்.17:-
தூத்துக்குடி – நாசரேத் சி.எஸ்.ஐ திருமண்டலத்தை சேர்ந்த ஆசிர்வாதபுரம் சேகரத்தில் திருமண்டல தேர்தல் வாக்கு உரிமைக்கான கட்டணத்தை ஆறு மடங்காக உயர்த்தியதை கண்டித்து தீர்மானம் மற்றும் உண்ணாவிரதம் நடந்தது.
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தில் தேர்தல் சமயங்களில் சபை மக்கள் வாக்குரிமை பெற வேண்டியதற்கு வாக்குரிமை கட்டணமாக கடந்தகாலங்களில் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. தற்போது அதை 600 யாக ரூபாயாக உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திரு மண்டலத்திற்கு உட்பட்ட சேகர சபை மக்கள் பெரும்பாலானோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.ஆசீர்வாதபுரம் சேகரத்தில் இந்த கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கட்டண உயர்வு குறித்து சேகர செயலாளர் ஸ்டாலின் கூறியதாவது,
’’தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்கு உட்பட்ட சபை மக்கள் வாக்குரிமை பெற வேண்டினால் இதுவரை வாக்குர கட்டணமாக 100 ரூபாய் செலுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வாக்குரிமை கட்டணம் ஆறு மடங்காக அதிகரித்து ரூபாய் 600 என தெரிவிக்கப்பட்டது கடந்த காலங்களில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் இந்த கட்டண உயர்வு மிகவும் சபை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எனவே இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும் இந்த உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்யக் கோரியும் ஆசிர்வாதபுரம் சேகரத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது . மேலும் ஆறு மடங்காக கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், கீழ் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு செவி சாய்க்காமல் எதேச்சையாக செயல்படும் திருமண்டல நிர்வாகத்தை கண்டித்தும், திருமண்டல சேகர தலைவர்களாக பணியாற்றும் சேகர குருக்களின் ஆணவப் போக்கை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ஆசீர்வாதபுரம் ஆலய வளாகத்தில் நடந்தது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆசிர்வாதபுரம் சேகர செயலர் ஸ்டாலின் தலைமை வகித்தார். ஆசிர்வாதபுரம் உறுப்பினர் யோசுவா ஆசீர்வாதம், போலையர் புரம் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் டேவிட், ஆசிர்வாதபுரம் சேகர பொருளாளர் சேகர், உறுப்பினர்கள் ஜான்சன், பழனியப்பபுரம் மன்ற உறுப்பினர் ஜெயசிங் உட்பட சுமார் 30 பேர் கலந்து கொண்டனர் .மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் வாராவாரம் இந்த உண்ணாவிரத போராட்டம் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும்.மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை திருமண்டல அளவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.