தூத்துக்குடி,பிப்.18:
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் 3வது கேட் மேம்பாலத்தில் இருந்து ஒருவர் கீழே குதித்தார். அவர் தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பதாக தெரிகிறது. கீழே விழுந்து ஆபத்தான நிலையில் கிடந்தவரை அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.