கோவில்பட்டி புற்றுக்கோவிலில் சிறப்பு பூஜை

0
87
kvp news

தூத்துக்குடி,பிப்.17:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சமேத ஸ்ரீ சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் மாசி மாத வளர்பிறை சஷ்டி சிறப்பு பூஜை ஸ்ரீவள்ளி தேவசேனா கல்யாண முருகனுக்கு நடைப்பெற்றது.

இதனையொட்டி காலை 10.00க்கு மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து மஞ்சள் பால் தேன் வீபூதி பன்னீர் சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை நடைப்பெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அர்ச்சகர் செய்தார்.

இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தேவகி ரவிநாராயணன் காளிராஜ் சங்கரேஸ்வரி செய்திருந்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here