ராகுல்காந்தி 27,28,மார்ச் 01 தேதிகளில் தேர்தல் பிரச்சாரம் குறித்து நாளை தூத்துக்குடியில் கே.எஸ்.அழகிரி ஆலோசனை

0
150
Rahulgandhi

தூத்துக்குடி,பிப்.18:

விருதுநகர்,தூத்துக்குடி,நெல்லை,தென்காசி,கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முறையே 27,28,மார்ச் 01,ஆகிய நாட்களில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தேர்தல்பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் ராகுல்காந்தியின் தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசனை கூட்டம் நாளை 19ம் தேதி வெள்ளிக்கிழமை தூத்துக்குடியில் நடைபெறுகிறது. தமிழக காங்கிரஸ் கட்சி யின் தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டம் எட்டையபுரம் ரோட்டில் உள்ள சிட்டி டவரில் மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது .தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி, சட்டமன்ற கொறடா கே.ஆர்.ராமசாமி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்ல பிரசாத், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் வருகை தருகிறார்கள்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன், வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருக்கின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆர் தனுஷ்கோடி ஆதித்தன், மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் A.P.C.V.சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராணிவெங்கடேசன்,எஸ். டேனியல்ராஜ், M.B.சுடலையாண்டி, மாநில செயலாளர் சிந்தியா வயலட் லில்லி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்கள்,மாவட்ட துணை அமைப்பு தலைவர்கள்,வட்டார,நகர,பேரூராட்சி தலைவர்கள்,மாவட்ட நிர்வாகிகள்,மண்டல தலைவர்கள்,வார்டு தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸார் கலந்து கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here