கூட்டுறவு வீட்டு வசதி சங்கப்பணியாளர்களின் சம்பளபாக்கியை வழங்க வேண்டும் – முதல்வரிடம் மனு

0
37
cm edappadi

தூத்துக்குடி,பிப்.18:

தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கப் பணியாளர்களுக்கு கடந்த 5ஆண்டு கால சம்பள பாக்கியை வழங்கிடவேண்டுமென முதலமைச்சரிடம் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தூத்துக்குடி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் திருநெல்வேலி மண்டல கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர்கள் யூனியன் பொதுச்செயலாளர் மாரியப்பன், தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளர் ஜெபராஜ் ஆகியோர் கொடுத்துள்ள மனு: கடந்த 15 ஆண்டு காலமாக கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு கடன்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில் சங்கங்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிலவிவரும் இந்தச்சூழலால் மேற்கண்ட சங்க பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள சுமார் 1800 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பணியாளர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தப் பணியாளர்கள் கடந்த 5 ஆண்டுகளாக சம்பளம் இல்லாமலயே பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கண்ட சங்க பணியாளர்கள் ஆயிரத்து 800பேர் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் கருதி நிலுவை சம்பளத்தினை தாமதமின்றி வழங்கிடவேண்டும், மேலும், இந்த பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திடவேண்டும்.

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் சுமார் 600பணியிடங்கள் நிரந்தரப்படுத்தப்படாமல் உள்ளது. இப்பணியிடங்களை உடனடியாக நிரத்திரப்படுத்திடவேண்டும், நலிவுற்ற சங்கங்களை மேம்படுத்த அரசு அனைத்து கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கும் பாகுபாடு இன்றி கடன் வழங்கிடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.

இந்த கூட்டுறவு கடன் சங்க நிர்வாகமானது தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டின் கீழுள்ள துறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here