தூத்துக்குடி, பிப்.18:-
தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கீதாஜீவன் எம்.எல்.ஏ., மற்றும் அவரது தம்பி என்.பி.ஜெகன் பெரியசாமியும் விருப்ப மனு அளித்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தலைமைக் கழகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்பேரில், திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்களை கொடுத்து வருகின்றனர்.

இதன்படி, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தலைமைக்கழகத்தில் விருப்ப மனு அளித்தார். இதுபோன்று, அதே தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மாநில பொதுக்குழு உறுப்பினரும், கீதாஜீவனின் தம்பியுமான என்.பி.ஜெகன்பெரியசாமியும் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோரிடம் மனு அளித்தனர்.