வைப்பாறு ஆற்றில் மூழ்கி 15வயது சிறுவன் உட்பட 2பேர் பரிதாப பலி

0
101
vilathikulam

தூத்துக்குடி,பிப்.19:-

விளாத்திகுளம் அருகே வைப்பாறு ஆற்றில் ஆடுகளை குளிப்பாட்டியபோது நீரில் மூழ்கி 15வயது சிறுவன் உட்பட 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள பேரிலோவன்பட்டி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர்கள் பெத்தோவன் சின்னையா மகன் சென்ராய பெருமாள் (15), குமார் மகன் ராம்ராஜ் (37) இவர்கள் இருவரும் ஆடுமேய்க்கும் தொழிலாளர்கள். இன்று மதியம் இருவரும் தங்களது ஆடுகளை வைப்பாற்று ஆற்றுப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டபின்னர் ஆடுகளை வைப்பாற்றில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சென்ராய பெருமாள் தண்ணீரில் மூழ்கினார்.

இதையடுத்து ராம்ராஜ் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் அவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் இருவரும் உயிரிழந்து விட்டனர். இதையடுத்து இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை டிஎஸ்பி பிரகாஷ் பார்வையிட்டார். ஆற்றில் மூழ்கி 2பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை எற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here