மூன்று நாள் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

0
143
cm news

தூத்துக்குடி,பிப்.19:-

தூத்துக்குடி,திருநெல்வேலி,தென்காசி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக் கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை திரும்பினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 17.02.2021 அன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 18ம் தேதி நேற்று நெல்லை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், இன்று (19ம்தேதி) தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கார் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், வடக்குமாவட்ட செயலாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏவுமான சண்முகநாதன், எம்.எல்.ஏ சின்னப்பன், மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், மாநகராட்சி கமிஷனர் சரண்யாஹரி மற்றும் அதிமுகவினர் பூங்கொத்து கொடுத்து முதல்வரை வழியனுப்பி வைத்தனர். விமானம் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here