தூத்துக்குடி மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு கூட்டமைப்பினர் சண்முகநாதன் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவிப்பு

0
116
s.p.shanmuganathan

தூத்துக்குடி,பிப்.19:-

தூத்துக்குடி மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு கூட்டமைப்பை சார்ந்தவர்கள் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 10 பேர் தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா மூன்று சக்கர ஸ்கூட்டர் கேட்டு எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ விடம் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டியன் ஏற்பாட்டில் மனு செய்திருந்தனர். மாவட்ட நிர்வாகத்தால் அவர்களுக்கு ஸ்கூட்டர் பெறுவதற்கான ஆணை கடிதம் வரப் பெற்றதையடுத்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏவை தூத்துக்குடியில் உள்ள அவரது அலுவலகத்தின் முன்பு சந்தித்து விலையில்லா மூன்று சக்கர மோட்டார் ஸ்கூட்டர் கிடைக்க நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது முன்னாள் மீன் வளர்ச்சி கழக வாரிய தலைவர் அமிர்தகணேசன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாநகரப் வடக்கு பகுதி கழக செயலாளர் பொன்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் முனியசாமி, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் விக்னேஷ், வட்டக் கழக செயலாளர்கள் மனுவேல் ராஜ், பழனிச்சாமி பாண்டியன், உலகநாத பெருமாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர்கள் சகாயராஜா, கௌதம், பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சங்கரராமன், அப்பகுதி இளைஞர்கள் பெண்கள் பாசறைச் செயலாளர் நிலா சந்திரன், மற்றும் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சுந்தரேஸ்வரன், பொருளாளர் பரிபூர்ண ராஜா, பாலஜெயம், சாம்ராஜ் உட்பட பலர் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here