தூத்துக்குடி,பிப்.21:
தூத்துக்குடியில் முன்னாள் சட்ட மன்ற மேலவை உறுப்பினர் பொன்னுசாமி வில்லவராயர் நூற்றாண்டு விழா நடைப்பெற்றது.

தூத்துக்குடி,பாஸ்கரன் திருமண மஹாலில் முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பொன்னுசாமி வில்லவராயர் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில், திமுக மகளிரணிச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி கலந்துகொண்டு, நூற்றாண்டு நினைவு தபால் உரையை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், பொனோ வெஞ்சர் ரோச், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்பாத்துரை, தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியேல்ராஜ், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், சேசையா வில்லவராயர், A.P.C.V.சண்முகம், சிசில் மச்சாடோ மற்றும் பலர் கலந்துகொண்டனர்.