எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் மூலம் ஆடுகள் திருட்டு – 7 பேர் கைது

0
105
theft case

தூத்துக்குடி,பிப்.21:

எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் மூலம் ஆடுகளை திருடியதாக 7பேர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மேய்சலுக்குச் சென்ற ரூ.45ஆயிரம் மதிப்புள்ள 9 செம்மறி ஆடுகளை மர்ம நபர்கள திருடி சென்று விட்டதாக எட்டயபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் எட்டையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவுப்படியும் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் ஆலோசனைபடியும் எட்டையாபுரம் சப் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், சிந்தலக்கரை சமத்துவபுரம் அருகே வாகனத் தணிக்கை செய்யும் வந்த பொலிரோ பிக்கப் நான்கு சக்கர வாகனத்தில் 9செம்மறி ஆடுகளைக் கொண்டு சந்தேகத்திற்கு இடமாக வந்த மதுரையைச் சேர்ந்த 7 பேரை பிடித்து எட்டையாபுரம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை விசாரணை நடத்தியதில் அவர்கள் எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலைகளில் மேய்ந்து கொண்டிருந்த 9 செம்மறி ஆடுகளை திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

மதுரையைச் சேர்ந்த 1.பாலகிருஷ்ணன் (37), அக்னி ராஜ் (41), சோலை (40), திருப்பதி (35). லட்சுமணன் (33). அருஞ்சுனை (50). சுப்பிரமணியன் (70) ஆகியோர்களை கைது செய்து 9 செம்மறி ஆடுகளையும் அதனை திருடியதற்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 7பேரையும் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் ஆஜர் செய்து சிறையில் அடைத்தார்கள். இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினரை எஸ்பி ஜெயக்குமார், டிஎஸ்பி பிரகாஷ் ஆகியோர் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here