தூத்துக்குடி, பிப்.21:-
மாநிலம் முழுவதும் மாவட்டத்தில் 6வது நாளாக வருவாய்துறையினர் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும், கடந்த ஆண்டுமுதல் கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைத்துள்ள சரண்டர் விடுப்பு மற்றும் அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இன்று 6வது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைத்து தாலுகா அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி காணப்பட்டது.
இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தால் பொதுமக்களுக்கான சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் முடங்கி, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.