தூத்துக்குடி, பிப்.22:-
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவினை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்று மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா நாளைமறுநாள் (24ம் தேதி) கொண்டாடப்படுகிறது.
பிறந்தநாளை முன்னிட்டு அன்று காலை 9மணியளவில் எனது தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகம் அமைந்துள்ள டூவிபுரம் 7வது தெருவில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இதில், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்ட கிளை நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், தொண்டர்கள் என அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டுகிறேன்.
மேலும், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவினை கொடியேற்றியும், இனிப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிடவேண்டும்.
தொடர்ந்து, வரும் 28ம் தேதி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உடன்குடியிலும், மார்ச் 1ம் தேதி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பூபாலராயர்புரத்திலும், 2ம் தேதி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி ஏரலிலும் ஜெயலலிதா பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.