கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள் தருவைகுளம் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும்

0
200
tnstc bus

தூத்துக்குடி,பிப்.22:

கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள் தருவைக்குளம் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தருவைக்குளம் புனித சூசையப்பர் சபை தலைவர் அந்தோணி அண்ணாதுரை தலைமையில் சபை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலெக்டர் செந்தில்ராஜிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: தூத்துக்குடி அருகே ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்குட்பட்ட எங்கள் கிராமத்தில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகிறோம்.

எங்கள் ஊரில் 250 விசைப்படகுகளும், 250 சிறிய மற்றும் நாட்டுப்படகுகளும் உள்ளன. எங்கள் கிராமத்திற்கு வைப்பார், வேம்பார், சாயல்குடி, சிக்கல், ராமநாதபுரம், தொண்டி, மீமிசல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான மீன் பிடி தொழிலாளர்கள் மீன் பிடி தொழிலுக்காக வந்து செல்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், தூத்துக்குடியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமேஸ்வரம், நாகப்பட்டணம், சாயல்குடி, விளாத்திக்குளம், மீமிசல் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் எங்கள் ஊருக்குள் வராமல் ஊரின் வெளிப்பகுதி வழியாக சென்று விடுவதுடன், பயணிகளை இரவுநேரங்களில் கூட ஊரின் வெளியேயே இறக்கி விட்டு சென்று விடுகின்றனர்.

இதனால், மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள், மீன் பிடி தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்துதரப்பினரும் நாள்தோறும் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே எங்கள் கிராமமக்கள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் எங்கள் ஊருக்குள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here