செல்வ மகள் சேமிப்பு திட்டம் : 500 குழந்தைகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நிதியுதவி

0
96
kadambur raju news

கோவில்பட்டி,பிப்.23:

கோவில்பட்டியில் ரூ.1.25 லட்சம் சொந்த நிதியில், 500 பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு துவக்கப்பட்டு சேமிப்பு கணக்கு புத்தகத்தினை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சொந்த நிதி ரூ.1.25 லட்சம் மதிப்பில் 500 பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு துவக்கப்பட்டு சேமிப்பு கணக்கு புத்தகத்தினை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு தனது சொந்த நிதி ரூ.1.25 லட்சம் மதிப்பில் 10 வயதுக்குட்பட்ட 500 பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கினை துவக்கி கணக்கு புத்தகத்தினை பெண் குழந்தைகளிடம் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது: புரட்சித்தலைவி அம்மா அவர்களின் காலத்தில்தான் பெண் குழந்தைகளுக்கென அதிக அளவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. செல்வ மகள் சேமிப்பு திட்டம் 2018ம் ஆண்டு மத்திய அரசின் மூலம் துவக்கப்பட்டது. 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் கணக்கு துவக்கப்பட்டு அவர்களுக்கு 21 வயதாகும்போது அவர்களின் திருமணம் மற்றும் உயர் கல்விக்கு இத்திட்டம் மிகவும் உதவியாக செயல்படுத்தப்பட்டு;ள்ளது. கடந்த ஆண்டு எனது சொந்த நிதி ரூ.1 லட்சத்தில் 400 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவக்கப்பட்டு சேமிப்பு கணக்கு புத்தகம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு எனது சொந்த நிதி ரூ.1.25 லட்சம் மதிப்பில் 500 பெண் குழந்தைகளுக்கு கணக்கு துவக்கப்பட்டு புத்தகம் வழங்கப்படுகிறது.

இந்த குழந்தைகள் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காவே செல்வ மகள் சேமிப்பு திட்டம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை காக்கும் வகையில் நமது மாவட்டத்தில் இன்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தூத்துக்குடியில் ரூ.25 லட்சம் மதிப்பில் தாய்பால் வங்கி துவக்கப்பட்டுள்ளது. இன்று செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் புள்ளியாக துவக்கப்பட்டுள்ள இந்த அஞ்சலக சேமிப்பு கணக்கு மிக அழகான கோலத்தை போல பெருகி வளமாக மாற வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரிசுப்புராஜ், கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன், கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், அஞ்சலக துணை கோட்ட கண்காணிப்பாளர்கள் வசந்தசிந்துதேவி, பரமேஸ்வரன், சீதாலட்சமி, தலைமை அஞ்சகல அலுவலர் லதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here