தூத்துக்குடி விமான நிலையம் மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது

0
53
collector

தூத்துக்குடி, பிப்.24:

தூத்துக்குடி விமான நிலையம் மேலும் விரிவாக்கம் செய்யப்படுவது குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கருத்துக்கேட்பு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் சத்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக குமாரகிரி, சேர்வைக்காரன்மடம், முடிவைத்தானேந்தல், கட்டாலங்குளம் பகுதியில் நிலம் எடுப்பது குறித்தும், விமான நிலைய ஓடுபாதையை 45 மீட்டராக அகலப்படுத்துவது குறித்தும் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்க்கப்பட்டது. கூட்டத்தில், கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது: விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

விமான நிலைய வளாகத்திற்காக எடுக்கப்பட்ட நில விபரங்கள் தாலுகா அலுவலகத்திலுள்ள தகவல் பலகை மூலமாகவும், நில உரிமையாளர்களுக்கு தபால் மூலமாகவும் தெரிவிக்கப்படும் என்றார். இதில், விமான நிலைய பணியாளர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here