நாசரேத்,பிப்.27:
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது நாசரேத் சி.எஸ்.ஐ பேராலயத்திற்கு வருகை தந்த ராகுல்காந்தி தலைமை குருவானவர் ஆண்ட்ரூ விக்டர் ஞானஒளியிடம் ஆசிபெற்றார். அவருக்கு கிறிஸ்தவர்களின் புனித நூலான வேதாகமத்தை நினைவுப் பரிசாக குருவானவர் வழங்கினார்.
இதில் உதவி குருவானவர் இஸ்ரவேல் ஞானதுரை, சபை ஊழியர்கள் ஜெபஸ்டின் தங்கபாண்டியன்,ஜெபராஜ் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக நாசரேத் வருகை தந்த ராகுல்காந்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் தூத்துக்குடி தெற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.