”மத்தியரசின் திட்டங்களை விரிவாக சொல்லி ஓட்டு கேப்போம்” – தூத்துக்குடியில் எல்.முருகன் பேட்டி

0
33
l.murugan

தூத்துக்குடி,மார்ச்.05:-

கன்னியாகுமரி செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது, ’’தமிழகம் முழுவதும் பாஜக தேர்தல் பணிகளை துவங்கியுள்ளது.

அதிமுகவுடனான எங்களுடைய கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டுள்ளது. தென்மாவட்டங்கள் மட்டுமின்றி பல தொகுதிகளை கேட்டு வருகின்றோம். இரட்டை இலக்கத்தில் பாஜக தேர்தலில் போட்டியிடும். திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை நோக்கமாக கொண்டு சசிகலா அரசியல் விட்டு விலகுவதாக சொல்லியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.

மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.5லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை, சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுடன், தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்தப்பட்டுள்ளது ராமநாதபுரத்தில் கடல் பாசிக்காக தனியாக சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட இருக்கிறது.

பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ரூ-.5லட்சம் வரை சிகிச்சை பெற்றுக்கொள்வது, சுயசார்பு பாரத திட்டம் உள்ளிட்ட ஒவ்வொருவருடைய வீட்டிலும் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதனையெல்லாம் மக்களிடத்தில் விரிவாக எடுத்துக்கூறும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் தொடங்கிய பின்னர் காங்கிரஸ் தலைவர் தலைவர் ராகுல்காந்தி கல்லூரி ஒன்றில் பாரத பிரதமருக்கு எதிரான விமர்சனங்களை மேற்கொண்டுள்ளது, தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது’’ என்றார்.

பேட்டியின்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், சிறுபான்மை அணி மாநில செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட செயலாளர் மான்சிங் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here