கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரானார் பொன்ராதாகிருஷ்ணன் !

0
28
bjp Ponradhakrshnan

கன்னியாகுமரி,மார்ச்.6:

தமிழக சட்ட மன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. அத்துடன் காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்லும் நடக்கிறது.

கன்னியாகுமரி தொகுதியில் எம்.பியாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார் உடல்நலக்குறைவால் காலமானார். அதனால் அத்தொகுதி எம்.பி இல்லாமல் காலியாக இருந்து வருகிறது. தற்போது தமிழக சட்ட மன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. அப்போது குமரி எம்.பி தொகுதிக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற இருக்கிறது.

திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதிமுக – பாஜக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். தமிழக பாஜக தலைமை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

1999ல் நாகர்கோவில் மக்களவைத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றவர் பொன்ராதாகிருஷ்ணன். பின்னர் 2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் (அ.தி.மு.க. கூட்டணி) போட்டியிட்டார். 2009 ஆம் ஆண்டு தேர்தலில், திருத்தி அமைக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார். பின்னர் 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலிருந்து, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டிட்டு தோல்வி அடைந்தார்.

வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் 30–9–2000 முதல் 30–1–2003 வரை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்தார். தொடர்ந்து, 30–1–2003 முதல் 7–9–2003 வரை நகர்ப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புத் துறை இணை மந்திரியாக பதவி வகித்தார். பின்னர், 8–9–2003 முதல் 2004–ம் ஆண்டு மாதம் வரை தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சராக இருந்தார்.

நரேந்திர மோடி அமைச்சரவையில் கனரக தொழில் மற்றும் பொதுத்துறை தொழிற்துறை இணை அமைச்சராக பணியாற்றினார். மத்திய நிதி மற்றும் சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சராக பணியாற்றினார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தமிழக பாஜகவின் துணை தலைவராகவும், 2003 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை மாநில பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆகஸ்ட் 16 வரை தமிழக பாஜக வின் தலைவராகவும் இருந்தார். தற்போது கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் வேட்பாளர் ஆக்கப்பட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here