பேச்சு வார்த்தை நடத்துவது குறிப்பிட்ட சில தொகுதிகளுக்காக.. நேர்காணல் நடத்துவது அத்தனை தொகுதிகளுக்காகவும்..

0
25
nerkaanal

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மக்களுடைய கவனம் பெரும்பாலும் அரசியல் நடவடிக்கையின் பக்கமே சாய்ந்திருக்கும். டீகடைகள், சலூன் கடைகள் என மக்கள் கூடுகிற அத்தனை இடங்களிலும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்தே பேசப்படுவது வழக்கம். அப்படித்தான் தற்போதும் பேசப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வு செய்வது என அத்தனை நடவடிக்கைகளுக்கு நடுவே, நேர்காணல் நடத்துவது இப்போது அதிசயமாக பேசப்படுகிறது. வெறும் 25, 30 என சீட் வாங்கும் அரசியல் கட்சிகள் கூட ஒட்டுமொத்த தொகுதிக்கும் நேர்காணல் நடத்துகிறது. அத்தனை தொகுதியிலும் தனது கட்சியினரிடம் விருப்ப மனுக்களை வாங்குகிறது. அத்தனை தொகுதியிலும் போட்டியிடப்போவதில்லை என்று தெரிந்தும் எதற்காக அத்தனை தொகுதியிலும் கட்சியினரிடம் விருப்ப மனு வாங்க வேண்டும் அவர்களுக்கு வேட்பாளர் ஆசையை தூண்டிவிட வேண்டும் என தெரியவில்லை.

இது குறித்து விபரம் அறிந்தவர்கள் சிலர், ‘’கூட்டணி கட்சிகள் என்ன சொல்லப்போகிறது என தெரியவில்லை. கூட்டணி உறுதியாக வில்லை என்றால் தனித்து போட்டியிட வேண்டும். அதற்கு பயன்படும் என்பதற்காகத்தான் இப்படி செய்கிறார்கள் போல் தெரிகிறது. எந்த நோக்கத்தில் இதை செய்தாலும் அதை வரவேற்க முடியாது. கட்சித் தலைமை தொண்டர்களையும் நிர்வாகிகளையும் இந்த அளவிற்கு குறைத்து மதிப்பிட கூடாது.

கூட்டணியில் தங்கள் கட்சிக்கு எத்தனை தொகுதி தரப்படுகிறது? எந்தந்த தொகுதிகளெல்லாம் தருமோ அந்த தொகுதி கட்சியினரிடம் மட்டும் நேர்காணல் நடத்தலாம். கால நேரம் போதாது என்று சொல்லிக் கொண்டு, அனைவரையும், விண்ணப்பிக்க செய்துவிட்டு அவர்களில் சிலரை தவிர பெரும்பாலானவர்களை ஏமாற செய்வதுதான் சில கட்சிகளின் கொள்கையா என்று கேட்க தோன்றுகிறது’’ என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here